Saturday, October 23, 2010

உலக வெப்பமயமாதல்....


"நினைத்து பார்"
காட்டமற்ற இயற்கை அன்னையின் இன்முகத்தை....
காலம் தவறாத காலநிலை மாற்றம்....
எங்கு காணினும் பச்சைபசேல் தோற்றம்....
நெடுந்துயர்ந்த பனிமலை கூட்டம்....

இன்றோ...
கரியமிலத்தை கக்கும் கார்களும்.,
அதற்கு தோள்கொடுக்கும் தொழிற்சாலைகளும்...
எவன் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்ற 
போட்டியில் வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும்....
வெப்பக்காரணிகளை பட்டவர்த்தனமாய் பரிமளித்து கொண்டிருக்க....

இதோ 
காட்டிவிட்டாள் இயற்கையன்னை தன் கோரமுகத்தை.....
குடிமூழ்கும்  குடிநீர் பஞ்சத்தை ஏற்படுத்த 
தொடர்ந்து உருகும் பனிமலையாய்.....
மனிதனின் உளபாட்டை உலுக்க...
ஓசோன் குடையில் ஓட்டையாய்..........
மும்மாரி தவறி பெய்யும் குறைந்த அளவு
மழையும் அமில மழையாய்..........
ஆங்காங்கே வெடித்து சிதறும் எரிமலைகள்
இயற்கையன்னையின்  தணிக்க இயலா வெம்மையின் வெளிப்பாடாய்......

இந்த "உலகவெப்பமயமாதல்" தொடங்கிவிட்டது உலகமயானமயமாதலை...................





Wednesday, October 20, 2010

ஹமாம் விளம்பரத்தில் விபரீதம்......
                                    
தற்போது ஒளிபரப்பாகி வரும் ஹமாம்  விளம்பரத்தில் ஏற்ற தாழ்வுகளை உணர்த்தும் வண்ணம் ஓர் கதாபாத்திரம் பேசும் வசனம் அமைந்துள்ளது....
அது அந்த குழந்தைக்கு ஏன் கைகளில் அலர்ஜி வந்துள்ளது என கேட்பதாகவும் அதற்கு தாத்தாவாக வரும் கதாபாத்திரம்  "ஆட்டோவில் கண்ட பசங்களுடன் ஒட்டி கொண்டு செல்வதால் வருவதாக" கூறப்பட்டு இருக்கும்.....  இது தெரிந்தோ தெரியாமலோ இடம் பெற்ற வசனமாக இருக்கலாம்...ஆனால் முழுவதுமாக கண்டிக்க பட வேண்டியது... இந்த விளம்பரத்தை சென்சார் கமிஷன் காணவில்லையா ??.... ஏற்ற தாழ்வுகள் எதிலும் வேண்டாமென்று அனைத்திலும் சரிசமம் கொண்டுவந்து கொண்டிருக்கும் போது இந்த மாதிரியான சில ஊடக நிகழ்வுகளால் ஏற்ற தாழ்வுகள் எண்ணங்கள் நூல் அளவும் ஏற்பட கூடாது... சம்பந்தபட்டவர்கள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுகொள்கிறேன்.......

                                                                                                                                                                                                                                           -சேபி- 

Monday, October 4, 2010

காதல் காத்திருப்பின் உண்மை....

அவன் காத்திருந்தான் அவளுக்காக....
பேருந்து நிறுத்தத்தில்.... 
போய்கொண்டேயிருந்தது பேருந்து மட்டும் அல்ல அவனது வீரியமிக்க கால விதைகளும்தான்......