Sunday, August 29, 2010

சேபியின் கவிப்பிதற்றல்கள்

முயற்சி...முயற்சி... விடாமுயற்சி பெரியமுள்ளை பிடிக்க வேண்டும் என்று சின்னமுள்...

கடிகாரத்தில்....

ஆட்டோவின் நேயம் பிரசவத்திற்கு இலவசமாக்கியது....
ஆஸ்பத்திரியின் நேயம் சுகபிரசவத்தைகூட அறுவைசிகிச்சையாக்கியது....

மனிதநேயத்தில் ஒரு முன்னேற்றம்....
ஊனமுற்றவனிலிருந்து மாற்றுத்திறனாளி....

 மனிதநேயம் 
மனிதனிடம் சொல்லாடலில் மட்டுமே இருக்கும் 
ஓர் முரண் தொடர்........ 

முரண் 
உலகவழக்கம் தூக்கிச் சென்றவர்களையும் ஏற்றிச் சென்றவர்களையும் கழற்றிவிடுவது...
இங்கே 
ரயில் என்ஜின் தான் கூட்டி வந்த பெட்டிகளை கழற்றி விடுகிறது


காதல் 
ஓர் இளமைகாலப் பிதற்றல் 

இரு மனங்கள் இணைந்து பல மனங்களை சிதைக்கும்
ஓர் உறவுச்சங்கமம் 



ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற பிதற்றல் எல்லாம் தேவையில்லை...



ஏழை எனும் சொல்லே இல்லாமல் ஆக்குவோம் என்ற முழக்கமே தேவை....
......


காகம் உட்கார்ந்து மின்சாரம் தடைபட்டது...
அச்சச்சோ.....   "கவலை "
காகத்திற்காக அல்ல தடைப்பட்ட மின்சாரத்திற்காக......