Tuesday, August 2, 2011

ஹய் -கூ.....

ஹய் -கூ.....
    

   பிச்சை எடுப்பவன் இப்படி பாடி பிச்சைஎடுத்தான்...



" இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே...


   இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே......                              


                                                                                                                                            -சேபி-                                                                                                          

Thursday, June 30, 2011

¦¾¡ôÒû ¦¸¡Ê
                         -சேபி-
²§¾¡ ¿¢¨ÉôÀ¢ø ¬úó¾¢Õó¾ ÀïºÅ÷½ò¨¾ ±ØôÀ¢ÂÐ «ó¾ ÌÃø, "Àïºì¸¡, ¿¡Ö þðÄ¢,«ïÍ åÅ¡öìÌ Àɢ¡Ãõ ¸ðÎí¸, º¡õÀ¡÷ §Å½¡í측 ºðÉ¢ ÁðÎõ §À¡Ðõ, «ôÀʧ À¢Ç¡ŠÊì ¸Å÷Ä ¸ðÎí¸ì¸¡" ±ýÈ ¦¸ïºÖ¼ý.

"¿¡Ö þðÄ¢ìÌ Ü¼ ²Éí¦¸¡ñ¼¡Ã Á¡ðÊ¡?" ±ýÈ ºÄ¢ô§À¡Î Å¡Ê쨸¨Â «ÛôÀ¢Å¢ðÎ Á£ñÎõ ¾¨Ã¢ø ¾ý À¡÷¨Å¨Â ¿¢¨ÄìÌò¾¢É¡û ¸Å¨ÄÔ¼ý.

¡âó¾ ÀïºÅ÷½õ? þðÄ¢ Å¢üÀÅÙìÌ «ôÀʦÂýÉ ¸Å¨Ä? ÀïºÅ÷½õ ¸½Å¨É þÆó¾ ¨¸õ¦Àñ. «Åû Å¡ìÌôÀð¼ À¡ÖÁ¢ò§¾Å÷ ÌÎõÀõ «ó¾ °Ã¢ø ¦ÀÂ÷§À¡ÉÐ. ¸½Åý ¿øÖÁ¢ þÈó¾ôÀ¢ý «ó¾ ÌÎõÀò¾¢üÌ Å¡úÅ¡¾¡Ãõ À¡ÖÁ¢ò §¾Å÷¾¡ý. «ÅÕõ ºÁ£Àò¾¢ø¾¡ý þÈó¾¢Õó¾¡÷. «Åâý þÆôÀ¡ø ÌÎõÀò¾¢ý ¿¢¨Ä ¬ð¼õ ¸ñ¼Ð. ¿øÖÁ¢ þÕó¾¡Öõ ÌÎõÀò¾¢üÌ º¾¡ ¸‰¼¸¡Äõ¾¡ý, «¨¾Å¢¼ ÀïºÅ÷½ò¾¢üÌ ¬õ °÷Ìʨ ¦¸Îò¾ «§¾ “Ìʾ¡ý” «Åû ÌʨÂÔõ ¦¸Îò¾Ð. «ô§À¡Ð ¨¸ì¦¸¡Îò¾Ð¾¡ý þó¾ þðÄ¢ Ţ¡À¡Ãõ. ±ý§È¡ À¢Èó¾ Å£ðÊø ¦ºö¾Ð þýÚ «ÅÙìÌõ «ÅÇ¢ý Á¸ÛìÌõ ¸ïº¢ °üÈ¢ÂÐ.
¸½Å¨É þÆó¾ÅÙìÌ §ÅÚ Â¡¨ÃôÀüâ ¸Å¨Ä þÕóÐÅ¢¼ô§À¡¸¢ÈÐ ±øÄ¡õ ¾ý Á¸ý âÁ¢ ±ýÈ âÁ¢¿¡¾¨É ÀüÈ¢¾¡ý.

“¸ðÊø ÒÕ„ÛìÌ À¢ý ¦¾¡ðÊø ÒÕ„ý” ±ýÀ¡÷¸û «Ð ¡ÕìÌ ¦À¡ÕóЧÁ¡? þø¨Ä§Â¡? ÀïºÅ÷½ò¾¢üÌ ¿ýÌ ¦À¡ÕóÐõ. ¸½Åý ¾¡ý ÌÊòÐÅ¢ðÎ ÀÎò¾¢É¡ý ±ýÈ¡ø, Á¸ý §ÅÚÅ¢¾Á¡ö ÀÎò¾¢É¡ý.±Îò¦¾È¢óÐ §ÀÍõ «ÅÉÐ §À¡ìÌõ,¾¡Â¢ý §À º¢È¢Ðܼ §¸ð¸¡¾ «ÅÉÐ ¿¼ÅÊ쨸Ôõ¾¡ý «ÅÇ¢ý ¸Å¨ÄìÌ ãÄõ.
«Ð ºÃ¢, þýÚ ¸¡¨Ä §Å¨Ç «ôÀʦÂýÉ ¸Å¨Ä «ÅÉ¡ø. «ýÚ âÁ¢¿¡¾ÛìÌ À¢È󾿡û «¾¢¸¡¨Ä¢ø «Å¨É ±ØôÀ¢ ÌÇ¢òÐ §¸¡Å¢ÖìÌ «¨ÆòÐî ¦ºøÄ ±ò¾É¢ò¾ÅÙìÌ «ÅÉ¢¼Á¢ÕóÐ Åó¾ ¦¸¡ïºíܼ ¸üÀ¨É ¦ºö þÂÄ¡¾ ÍΦº¡ü¸û ¸Äí¸Êò¾É. ±ó¾ò¾¡Ôõ º¸¢òÐ즸¡ûÇ þÂÄ¡¾ Å¡÷ò¨¾¸û «Ð×õ ¦ÀüÈ À¢û¨Ç¢¼Á¢ÕóÐ «ôÀʦÂýÉ Å¡÷ò¨¾¸û «¨Å?
           ¸¡¨Ä¢ø ±ØôÀ¢ÂÅ¨Ç À¢È󾿡û “«ÐÁ¡ ¯ý Ó¸òÐÄ ÓÆ¢îÍð§¼É¡ ¿¡ºÁ¡ §À¡îÍ, þó¾ ÅÕ„õ ¦ÅÇíÌÉ¡ôÒľ¡ý” ±ýÈ¡§É À¡÷ì¸Ä¡õ ¦¸¡ïºíܼ ¿¡Üº¡Áø..
            Á£ñÎõ Á£ñÎõ «§¾ Å¡÷ò¨¾¸Ç¡ø ¸Äí¸¢Â¢Õó¾Å¨Ç ¸¨Äò¾Ð âÁ¢Â¢ý ¿ñÀý ºñÓ¸ò¾¢ý   ÌÃø ,”«õÁ¡ âÁ¢ ±í¸ þýÛõ àíÌÈ¡É¡?” ±ýÈ §¸ûÅ¢Ô¼ý.

      “Å¡ôÀ¡! ºõÓ¸õ ¯ûÇò¾¡ þÕ측ý §À¡” ±ýÚ ¾¢ÈÉüÚ    ¦º¡ýÉ ÀïºÅ÷½ò¾¢ý Ó¸ò¨¾ «Åý ¸Åɢ측Áø þø¨Ä. ÅÆì¸õ§À¡ø ¾ý ¿½ÀÉ¢ý ¨¸í¸Ã¢Âõ ±ýÀ¨¾ 丢òÐÅ¢ð¼¡ý. þÅÛõ ÀïºÅ÷½ò¾¢üÌ Áü¦È¡Õ Á¸ý §À¡ýÚ¾¡ý.

      “§¼ö âÁ¢ ¯É즸øÄ¡õ ¦Ã¡õÀò ¾¢Á¢÷¼¡, «õÁ¡ Áɺ ÒñÀÎòÐȧ¾ ¯ÉìÌ §Å¨Ä¡ §À¡îÍ, ±í¸ûð¼ ±øÄ¡õ ¿øÄ¡¾¡É¼¡ §ÀÍÈ. «ôÒÈõ ²ý ¯í¸õÁ¡ð¼ ÁðÎõ þôÀÊ ¿¼óÐìÌÈ?”±ýÚ §¸ûÅ¢§Áø §¸ûÅ¢ §¸ðÎì ¦¸¡ñÊÕó¾ÅÛìÌ âÁ¢Â¢¼Á¢ÕóÐ º¢Ã¢ô§À À¾¢Ä¡ö ¸¢¨¼ò¾Ð.

      ´Õ ¸ð¼ò¾¢ø «Å¨ÉÔõ «È¢Â¡Áø ¿õÁð¼ ´ñ þÕìÌÈÅà «§¾¡¼ «ÕÁ ¦¾Ã¢Â¡Ð¼¡ «Ð ¯ýÉÅ¢ðÎ §À¡É¡¾¡ý «§¾¡¼ «ÕÁ ÒÕÔõ ¯í¸õÁ¡ ¯ýÉŢΠ§À¡É¡¾¡ý ¯ÉìÌ ¦¾Ã¢Ôõ ±ýÈ¡ý º¡À¦¾¡É¢Â¢ø.

“«ôÀÊ ±Ðõ ¬Â¢¼ìܼ¡ÐýÛ¾¡ý¼¡ ¿¡ý þôÀʦÂøÄ¡õ ¿¼óÐì̧Èý”±Ûõ§À¡Ð âÁ¢Â¢ý ÌÃø ¯¨¼ó¾¨¾ ºñÓ¸õ ¯½÷ó¾¡ý.

þó¾ ¯¨Ã¡¼ø¸û ¦¸¡ñÎ Åó¾ ÀïºÅ÷½ò¨¾ üÚ ¿¢Úò¾¢ÂÐ

“±ýɼ¡ âÁ¢ ±ýÉ ¦º¡øÈ?” ºñÓ¸õ.
“¬Á¡ý¼¡ ±ý§Áø Â¡Õ À¡ºõ ÅÖõ «Åí¸ ¦Ã¡õÀ ¿¡û þÕ츢ÈÐ þøÄ.Ó¾øÄ ±ý «ôÀ¡.. «ôÒÈõ ±ý ¾¡ò¾¡.. þ¨¾¦ÂøÄ¡õ ܼ ¿¡ý ¾¡í¸¢ì̧Åý¼¡. ¬É¡ ±ý «õÁ¡§Å¡¼ þÆôÀ ±ýÉ¡Ä ¾¡í¸ ÓÊ¡Ð. ±ý ƒ¡¾¸ôÀÊ ¿¡ý ±ý ÌÎõÀò¨¾Å¢ðÎ À¢Ã¢ï;¡ý þÕì¸Ïõ «ôÀÊ þÕó¾¢Õó¾ þó¾ ¦ÃñÎ þÆôÒ þÕó¾¢Õ측м¡” ±ýÚ Å¢õÁ¢É¡ý ¬õ âÁ¢ ÜÈ¢ÂÐ §À¡ø ƒ¡¾¸ÀÊ «Åý «ÅÉÐ ÌÎõÀò¨¾Å¢ðÎ À¢Ã¢óо¡ý þÕì¸ §ÅñÎõ «Å§É¡Î À¡ºò§¾¡Î þÕìÌõ ±ó¾ þÃò¾ ¦º¡ó¾Óõ ¿¢¨Ä측Р±ýÚ ÜÈôÀðÊÕó¾Ð. «¨¾Ôõ Á£È¢ò¾¡ý «Å¨É ¾ý§É¡Î ÅÇ÷òÐ Åó¾¡û ÀïºÅ÷½õ.

“§¼ö ±ýɼ¡? æÍ Á¡¾¢Ã¢ §ÀÍÈ. þó¾ ¸¡ÄòÐÄ ¿£ þ¨¾¦ÂøÄ¡õ ¿õÒŢ¡? §¸ð¼¡ý ºñÓ¸õ
¯í¸ôÀ¡×õ ¾¡ò¾¡×õ þÈó¾¾Ð þÂøÀ¡É ´ýÚ
“¿õÀ¢ì¨¸ þÕ째¡? þøħ¡? ±ó¾ Å¢¾ò¾¢Öõ ±í¸õÁ¡¨Å þÆì¸ ¿¡ý ¾Â¡Ã¡ þøļ¡. «¾É¡Ä¾¡ý Àì¸òÐÄ þÕó¾¡Öõ ±ý§É¡¼ Å¡÷ò¨¾¸Ç¡Ä ±ÉìÌõ «Åí¸ÙìÌõ µ÷ þ¨¼¦ÅÇ¢ ²üÀÎò¾¢ðΠŧÃý¼¡” âÁ¢

“Áý ¯ñ¨Á¢§Ä§Â ¯ýÉ ¿¢¨É ±ÉìÌ ¦ÀÕ¨Á¡ þÕì̼¡” ¦¿¸¢úó¾¡ý ºñÓ¸õ.
þó¾ ¯¨Ã¡¼ø¸¨Ç¦ÂøÄ¡õ §¸ðÎì ¦¸¡ñÊÕó¾ ÀïºÅ÷½ò¾¢ý ÁÉõ, “¿¡ý ¦Àò¾ Á¸É¡ þÐ þøÄôÀ¡ ±ýÉô ¦Àò¾ «ôÀý” ±ýÚ «í¸Ä¡öò¾Ð.

“¦¾¡ôÒû ¦¸¡Ê¨Â «ÚìÌõ§À¡Ð ÅÄ¢ ¦Àò¾ÅÙìÌ ÁðÎÁøÄ «ó¾ À¢ïÍìÌõ¾¡ý «¾üÌ Å¡Â¢øÄ¡¾¾¡ø ±ýɧš ¦ÅǢ¢ø ¦º¡øÖž¢ø¨Ä” ±ýÚ ²§¾§¾¡ ÁÉò¾¢ø ¬÷ôÀâòÐì ¦¸¡ñÊÕó¾Å¨Ç Á£ñÎõ ¸¨Äò¾Ð Óó¨¾Â ÌÃø, “Àïºì¸¡ þÃñÎ þðÄ¢ ¸ðÎí¸, º¡õÀ¡÷ ÁðÎõ §À¡Ðõ ºðÉ¢ §Å½¡õ þó¾¡í¸ ²Éõ þÐÄ ¨Åí¸” «¾¢¸¡Ãòмý...

Sunday, June 26, 2011

"காதல்" என்பது...

அவளை  பார்க்கும் ஆண்கள் , அவள்  பார்க்கும் ஆண்கள் மீது ஏனோ காழ்ப்புணர்வு...
இதுதான் காதலோ??...

என்றும் பார்த்தேயிராத என் பக்கத்துத் தெருநாய் அன்று ஏனோ அழகென்று கொஞ்ச தூண்டியது...
இதுதான் காதலோ???

சாலையில் அவள் செல்லும்போது ஏதோ அவளுக்காகத்தான் இந்த சாலை எண்ண தோன்றியது...
இதுதான் காதலோ??

சுட்டுப் போட்டாலும் வராத செந்தமிழுடன் ஏனோ கவிதை என்ற பெயரில் தள்ளுமுள்ளு..
இதுதான் காதலோ???

வறுகடலை வாங்கிய காகிதத்தில் அவள் பெயர் இருந்தால்கூட  அதையும் பத்திரப்படுத்த தூண்டும் மனது...
இதுதான் காதலா???

படிக்கும் புத்தகத்தில்கூட   அவள் முகம் தெரிவதாய் நண்பர்களுடன் அங்கலாய்க்கும் மனது...
இதுதான் காதலோ??

இவை அனைத்தும் சேர்ந்து விடிந்தது  எனது கடைசி தேர்வில் மதிப்பெண்ணாய்...
ஓஹோ புரிந்தது "இதுதான் காதல்"....

-சேபி-




Sunday, June 19, 2011

ஏழ்மையிலும் அணையா கல்வி தீபம்....

சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு (SSLC) முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்த நேரம். தேர்வு எழுதிய மாணவர்கள் எல்லாம் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, தன் தாயார் சண்முகத்துடன் முதல் நாள் மூட்டிவைத்த கரிமூட்டதில் இருந்து கரி அள்ளிக்கொண்டிருந்தான் மாரி. அவனும் இந்த முறை SSLC தேர்வு எழுதியவன்தான். ஆனால் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
“மாரி… யாரோ உன்னத் தேடி வந்திருக்காங்க…” என்று அவனுடைய மூன்றாவது அக்கா பானுப்ரியா சொல்ல, அள்ளிப்போட்டுக்கொண்டிருந்த கரியை அப்படியே வைத்துவிட்டு வந்தவனை, அவனுடைய பள்ளி நண்பர்கள் வாரி அணைத்துத் தூக்கிக்கொண்டனர். “மாரி! நீ 490 மார்க் எடுத்திருக்கடா! District First டா…” என்று கூறி அவனைத் தூக்கிக் கொண்டாடியபோது, எதுவும் புரியாவிட்டாலும் தன் மகன் ஏதோ சாதித்துவிட்டான் என்று உணர்ந்து கண்கள் கலங்கி நின்றார் மாரியின் தாய் சண்முகம்.
மாரி என்கின்ற மாரிச்செல்வம், இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூக்கையூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவன். அந்த மாவட்டத்து மக்கள் பலருமே கூடக் கேள்விப்பட்டிருக்காத ஒரு குக்கிராமத்தில் இருந்து படித்துக்கொண்டே, அந்த மாவட்டத்தின் முதல் மாணவனாக மதிப்பெண் பெற்ற அவனை, அடுத்த நாள் வந்த பத்திரிகைகள் அனைத்தும் மாவட்டச் செய்திகளில் பட்டியல் இட்டன. ஆனால் அவன் பரீட்சை எழுதியபோது அவனது குடும்பச் சூழ்நிலையை அறிந்தவர்கள் கொஞ்சம் வியந்துதான் போனார்கள். சோதனை மேல் சோதனையைத் தாங்கிக்கொண்டு, ஓர் ஏழைச் சிறுவனால் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கமுடியுமா என தங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டவர்கள் பலர்.
PAD நிறுவனத்தில் Christian Children Fund of Canada (CCFC) எனும் கிராமப்புறக் குழந்தைகளுக்கான உதவித்திட்டத்தில் உதவி பெற்றுவந்த மாரி, +1 சேர நிறுவன உதவி கேட்டு வந்தபோதுதான் PAD பணியாளர்களுக்கே, தேர்வெழுதிய சமயத்தில் மாரி சந்தித்த துயரங்கள் தெரியவந்தது.
மூக்கையூர் கிராமம்தான் மாரியின் சொந்த ஊர். எட்டாவது வரை அந்த ஊரில் உள்ள புனித யாக்கோபு நடுநிலைப் பள்ளியில் படிப்பை முடித்த மாரி, மேற்கொண்டு படிக்க அங்கிருந்து வேறு பள்ளிக்குச் செல்லவேண்டியிருந்ததால்,அதிலுள்ள கஷ்டங்களை உணர்ந்தவனாய், “அம்மா, நான் மேல படிக்கல. அப்பா கூடத் துணைக்குக் கடலுக்குப் போறேம்மா” என்று கூறினான். அதற்கு மேல் அவனைப் பேசவிடாமல் தடுத்த மாரியின் அப்பா முனியசாமி, “வேணாம் மாரி, நீ போய்ப் படி. அப்பா எல்லாத்தையும் பார்த்துகிறேன். நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் PAD-ல உனக்கு உதவி வாங்கித் தாராங்க… நல்லாப் படிக்கணும்யா. இப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது. உங்கக்கா பார்வதி நல்லாப் படிச்சாலும், எட்டாவதுக்கு மேல படிக்க உள்ளூர்ல ஸ்கூல் இல்லாததால படிக்க முடியாமப் போச்சுது. நீயாவது உன்னோட அக்கா வீட்டில போய் இருந்துகொண்டு மேல படிக்கப் பாரு. எப்படியாவது நம்ம வீட்டில நீயாவது படிச்சு நல்லாப் பிழைக்கணும். இதுதான் அப்பாவோட ஆசை” என்றார். அப்பாவின் வார்த்தைக்கு மறுப்பு ஏதும் கூறாமல் அவன் அக்காவின் வீடு இருக்கும் இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள வேலாயுதபுரம் என்னும் கிராமத்துக்குச் சென்று, அங்கிருந்த புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தான் மாரி.
மாரியின் அப்பா முனியசாமி ஒரு கடல் கூலித் தொழிலாளி. யாரேனும் கடலுக்குப் போவதற்கு மேலதிகமாக ஆட்கள் தேவைப்பட்டால் முனியசாமியும் போவார். அது இல்லாத நாட்களில் சிறு வலையை எடுத்துக்கொண்டு கரையோர மீன்பிடித் தொழில் செய்வார். அவருக்கு மாரியைப் பற்றிப் பல கனவுகள் இருந்தன. தனது குடும்பத்தில் ஒருவராவது படித்து முன்னேறி வரவேண்டும் என்று அவர் கனவு கண்டார்.
ஐந்து பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைககளைக் கொண்ட பெரிய குடும்பம் அவருடையது. கடின உழைப்பும் ஒழுக்கமான வாழ்க்கையுமே அதீத வறுமை அந்தக் குடும்பத்தை அண்டவிடாமல் காத்தது. நான்கு பெண்களுக்கும், ஒரு மகனுக்கும் திருமணம் முடித்துவிட்டார். எஞ்சியிருப்பது மாரியும், இன்னொரு அக்கா பானுப்ரியாவும்தான். மாரியைப் படிக்க வைக்கவேண்டும், சொந்தமாக ஒரு வள்ளம் வாங்கவேண்டும் என்று தன்னுடைய கனவுகளை அடைய இரவும் பகலுமாயக உழைத்துக்கொண்டிருந்த முனியசாமிக்கு மூளையில் கட்டி வந்து பல வருடங்களாக அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் முத்துப்பேட்டையில் அக்கா வீட்டில் படித்துக்கொண்டிருந்த மாரி படிப்பில் கவனம் செலுத்தியதோடு விடுமுறை நாட்களில் அவன் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலைக்கும், மாமாவுடன் (அக்காவின் கணவர்) கடல் தொழிலுக்கும் சென்று குடும்ப பாரத்தையும் விரும்பிச் சுமந்தான். “மாரி, இப்படிப் படிச்சா நல்ல மார்க் எடுக்கமாட்ட! இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்காப் படிக்க பாரு” என்று அவனுடைய அக்கா முருகேஸ்வரி அவனைக் கட்டுப்படுத்தி வந்தார். முருகேஸ்வரி மாரியின் மூத்த அக்கா. அவருக்கும் மூன்று பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை. மாரியையும் தனது மகன் போலவே வளர்த்து வந்தார். வீட்டுக்கு மூத்த பெண் என்பதால் தன் தந்தை வீட்டின் அனைத்து நலன்களிலும் பங்கெடுத்துவந்தார். முருகேஸ்வரியின் கணவர் முனியனும் பரந்த மனம் படைத்தவர். இருவரும் சேர்ந்துதான் முருகேஸ்வரியின் சகோதரிகளின் திருமணங்களை முடித்து வைத்தனர்.
தேர்வுகள் எழுத இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் மாரியின் தந்தை மூளையில் இருந்த கட்டி காரணமாக, சிகிச்சை ஏதும் பலன் அளிக்காமல் இறந்துபோனார். துவண்டுபோன மாரியை மீண்டும் பள்ளிக்குப் படிக்க அனுப்பப் பெரும் பாடு பட்டார் தாய் சண்முகம். அதன்பின் குடும்பச் சுமை முழுதும் தாய் சண்முகம் தலையில் விழ, அவரும் மகள் வீட்டில் இருந்து விறகு வெட்டச் செல்வது, கூலி வேலைக்குச் செல்வது, கரிமூட்டம் எனப் பல வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார். வறுமையின் மத்தியில் தன் படிப்பைத் தொடர்ந்த மாரி தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருந்தான்.
தேர்வு நாளும் வந்தது. முதல் இரண்டு தேர்வுகளையும் எழுதி முடித்து வந்த மாரியிடம், “பரீட்சை நல்லா எழுதிருக்கியா மாரி?” என அக்கா கேட்டார். “ஆமாக்கா. இன்னிக்கு English II பேப்பர். இனிதான் மேத்ஸ் பேப்பர் வரும். அதை நாளை மறுநாள் எழுதணும்” என்று பதில் சொல்லிக்கொண்டே அக்காவின் முகத்தைப் பார்த்த மாரிக்கு ஏதோ சரியில்லை என்று பட்டது. “என்னக்கா! என்னாச்சு?” என்று அவன் பதற, “ஒண்ணுமில்ல மாரி, நெஞ்சு கரிச்சிக்கிட்டே இருக்கு. அசதியா இருக்கு. சித்த நேரம் தூங்குனா சரியாயிரும்” என்றார். “சரிக்கா, நீ போய் தூங்குக்கா” என்ற மாரி தானே சோறு போட்டுச் சாப்பிட்டுவிட்டு படிக்கச் சென்றுவிட்டான்.
அன்று இரவு அவன் அக்காவுக்குக் கடுமையான நெஞ்சுவலி. ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த முருகேஸ்வரி, ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட கதறி அழுத மாரியை, “நாளைக்குப் பரீட்சை எழுதணும்… நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் உங்கக்கா ஆசைப்பட்டா” என்று அனைவரும் தேற்றினர். “மாரி, நீ போய் பரீட்சை எழுதிட்டு வா. அதுக்குப் பிறகு இறுதிச் சடங்கு வச்சுக்கலாம்” என அவன் மாமா கூறவும், அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, தன்னைத் தாயாக இருந்து பார்த்துக்கொண்ட சகோதரியின் பிணத்தருகே அழுதுகொண்டே படித்த மாரியை நினைத்து இப்போதும் கண்ணீர் வடிக்கிறார் அவன் தாய் சண்முகம்.”என்ன சார் மார்க் எடுத்தேன்.அம்மா மாதிரியிருந்த அக்கா சாவுக்கு அழக்கூட முடியாமல் பரீட்சைக்குப் படித்த பாவி சார்” என்று மாரி உடைந்து அழும் போது, நாமும் சேர்ந்து உடைய வேண்டிவருகின்றது.
அடுத்தநாள் அவன் பரீட்சை எழுதி முடித்துவிட்டு வரும்வரை அவனுடைய உறவினர்கள் காத்திருந்தனர். அவன் வந்ததும், அவனைக் கொண்டு அக்காவின் இறுதிச்சடங்குகளை நடத்தி முடித்தனர். சடங்குகள் அனைத்தும் முடிந்து, அடுத்த இரண்டு பரீட்சைகளையும் கனத்த இதயத்துடன் எழுதி முடித்தான் மாரி. பரீட்சைகள் முடிந்ததும் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலையில் இறங்கிவிட்டான்.
இந்த நிலையில்தான் அவனது தேர்வு முடிவுகள் வெளிவந்ததன.
அவனுடைய ஆசிரியர்கள், சக மாணவர்கள், அந்த ஊர் மக்கள் என் அனைவருக்குமே அவன் தேர்வு எழுதும்போது இருந்த நிலை நன்கு தெரியும். அப்படிப்பட்ட நிலையிலும் அவன் எடுத்த மதிப்பெண்கள் என்ன தெரியுமா? தமிழ் 95, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 98. சாதாரண நிலையில் இருக்கும் மாணவர்கள் இந்த மதிப்பெண்களை எடுக்கும்போதே ஆச்சரியப்படும் நமக்கு மாரியின் நிலையில் இருந்து பார்த்தால் பரிட்சையில் தேறுவோமா என்பதே சந்தேகம். அதிலும் அவனுடைய அக்காவின் இறுதிச் சடங்கன்று கணிதப் பரீட்சை எழுதி 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது? மாரியுடன் சேர்ந்து பரீட்சை எழுதிய அவனுடைய அக்கா மகள் நிர்மலாவும் 423 மதிப்பெண்கள் எடுத்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.
இத்தனை இடர்களுக்கும் மத்தியில் தனது 10-வது வகுப்பை முடித்துவிட்டு +1 சேர இருக்கும் மாரிக்கு இன்னும் பிரச்னைகளும் துன்பங்களும் முடிந்தபாடில்லை. கடந்த சில வருடங்களாக மாரிக்கு ஓயாத தலைவலி. வறுமையும் அடுத்தடுத்து வந்த சோகச் சம்பவங்களும் உளவியல்ரீதியாக மாரியை மிகவும் பாதித்துள்ளது. தாங்கமுடியாத தலைவலியால் அவதியுறும் அவனை உள்ளூர் வைத்தியர்களிடம் காட்டியபோது பிரச்னை ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டனர் கோயம்புத்தூரில் ஒரு மருத்துவரை அணுகி விசாரித்தபோது மாரியின் இருதயத்தில் பிரச்னை இருப்பதாகவும் அதைச் சரிசெய்ய சிறிது காலம் தேவை எனவும், அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரி செய்ய 21 வயதுவரை பொருத்திருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர். சிகிச்சைக்கு உதவ PAD தொண்டு நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அடுத்து Biology, Maths குரூப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் மாரி, இன்னும் எந்தப் பள்ளியில் சேர்வது, மேற்கொண்டு படிப்புக்கு என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறான். அத்துடன் அவனுடைய தாய் சண்முகத்துக்கும் உடல்நிலை சரியில்லை. குடும்ப பாரம் முழுவதையும் சுமந்துகொண்டிருக்கும் மாமா முனியன் பற்றிய கவலையும் மாரியை அரிக்கிறது.
இப்படிப் பல இடர்களுக்கு மத்தியிலும், தன் மனவலிகளையும் உடல்வலிகளையும் தாங்கிக்கொண்டு தனது அடுத்த சாதனைக்குத் தயாராகி விட்டான் மாரிச்செல்வம்…

Saturday, May 21, 2011


கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் எழுதிய கடிதம்....
        ( இதோ உங்களுக்காக எனது அங்கலாய்ப்பில்)   
                                                                                  -சேபி-

மதிப்புக்குரிய தலைவர் கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம். "எப்படி இருந்தவர்கள் இப்படி மாறிவிட்டார்களே' என்ற தலைப்பில் மிகுந்த ஆதங்கத்துடன் எனது பழைய கடிதம் ஒன்றை எடுத்து மேற்கோள்காட்டி விடுத்திருந்த அறிக்கையைப் படித்துப் பார்த்தேன். தேர்தல் முடிவுகள் வெளிவரும் நாளில் அதைப்பற்றிக்கூட கவலைப்படாமல், எனது கடிதம் குறித்து அறிக்கை வெளியிடும் அளவுக்கு உங்கள் மனநிலை இருந்திருக்கிறது என்பது புரிகிறது. "பொடா' சிறையில் நான் இருந்தபோது, நீங்கள் எழுதிய "தொல்காப்பியப் பூங்கா' நூலைக் கையெழுத்திட்டு எனக்கு அனுப்பி வைத்தீர்கள். நானும் அதைப் படித்துப் பார்த்துவிட்டுத் தங்களுக்கு ஒரு பாராட்டுக் கடிதம் அனுப்பினேன். ஆனால், தாங்கள் செய்த, செய்துவரும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கும் தங்களது இலக்கியத்தைப் பாராட்டுவதற்கும் இடையே உள்ள வேறுபாட்டை நன்கு அறிந்திருந்தும் திசை திருப்புவதற்கு முயற்சி செய்திருக்கிறீர்கள். இப்போது மட்டுமல்ல, நீண்டகாலமாகவே இவ்வாறு செய்து வருகிறீர்கள். 1969-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் முதல்முதலாக என் மீது பொய் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனாலும், முதலமைச்சராக அண்ணா இருந்தவரை, அந்த வழக்கு குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், நீங்கள் முதலமைச்சரான உடனேயே என்னைக் கைது செய்து சிறையில் அடைக்க ஆணை பிறப்பித்தீர்கள். 6 மாத நன்னடத்தை ஜாமீன் கொடுத்துவிட்டு வீட்டுக்குப் போகலாம் என நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பை எனது மனசாட்சி ஏற்க மறுத்தது. எந்தக் குற்றமும் செய்யாதபோது நன்னடத்தை ஜாமீன் எழுதிக்கொடுப்பதை நான் ஏற்கவில்லை. அதன் விளைவாக, ஆறு மாதம் சிறையில் இருக்க நேர்ந்தது. காமராஜ் மதுரை சிறைக்கே வந்து என்னைப் பாராட்டினார். அதைவிடச் சிறந்த பாராட்டு வேறு இல்லை. இதன் விளைவாக, தமிழகம் முழுவதற்கும் நான் அறிமுகமானேன். இதற்குக் காரணம் நீங்களே என்பதை இன்றும் நன்றியோடு நினைவுகூர்கிறேன். 1978-ம் ஆண்டு எதிர்க்கட்சித் தலைவராக இருந்த இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது, அவருக்குக் கறுப்புக் கொடி காட்டுவது என்ற பெயரில் உங்கள் தொண்டர்கள் அவரது உயிருக்கு உலை வைக்க முயன்றார்கள்.
 உங்களால் ஏவி விடப்பட்டவர்களின் கொடூரமான தாக்குதல்களிலிருந்து இந்திராவைக் காப்பாற்றிய பேறு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் அகில இந்திய அளவில் அறிமுகமானேன். இதற்கும் நீங்களே காரணம் என்பதை உணர்ந்து உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். 1985-ம் ஆண்டில் விடுதலைப் புலிகளின் துணையுடன் இலங்கைத் தமிழர் பகுதியில் ரகசியச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அங்கு சிங்கள ராணுவம் இழைத்து வரும் கொடுமைகளை ஆதாரப்பூர்வமாக அறிந்துவந்து வெளியிட்டபோது, நீங்கள் முரசொலி இதழில் என்னைப் பாராட்டி முழுப்பக்க அளவில் கட்டுரை எழுதினீர்கள். இப்போதும் அதை நன்றியோடு நினைவுகூர்கிறேன். ஆனால், நாம் ஒன்று கூடி உருவாக்கிய "டெசோ' அமைப்பை நீங்கள் தன்னிச்சையாகக் கலைத்தீர்கள். ஈழத் தமிழர் பிரச்னையில் உங்களுக்கு உண்மையான ஈடுபாடு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேட முற்படுகிறீர்கள் என்பதை உணர்ந்தபோது, உங்களுக்கு எதிர்நிலை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. காமராஜரோடு உங்களை ஒப்பிட்டும், உங்கள் ஆட்சியை காமராஜ் ஆட்சி என வருணித்தும் காங்கிரஸ்காரர்கள் சிலர் பேசுகிறார்கள். புரிந்து பேசுகிறார்களா அல்லது புரியாமல் பேசுகிறார்களா என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாகும். காமராஜ் மக்கள் தொண்டுக்காகத் திருமணத்தைத் துறந்தவர். பெற்ற தாயைக்கூட தன்னுடன் வைத்துப் பேணாதவர். ஒன்பது ஆண்டுகள் ஆங்கிலேயரின் கொடுமையான சிறையில் வாடியபோதும் அதுகுறித்து ஒருபோதும் பேசாதவர். மறையும்போது தான் உடுத்தியிருந்த துணிகளைத் தவிர, வேறு சொத்து இல்லாதவர். ஆனால், நீங்களோ மனைவி, துணைவி என பல்கிப் பெருகிய குடும்பங்களுடன் வாழ்பவர். அது மட்டுமல்ல, ஏழைக் குடும்பமான உங்கள் குடும்பம், இன்று ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரக் குடும்பங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தனது தாய் உள்பட, தனது குடும்பத்தவர் எவரையும் அரசியலில் அனுமதிக்காதவர் காமராஜ். அதைப்போலவே தான் உருவாக்கிய தி.மு. கழகத்தில் அண்ணா, தனது பிள்ளைகள் எவரையும் வாரிசாக அறிமுகப்படுத்தவில்லை. ஆனால், நீங்கள் செய்ததை நாடறியும். 1970-களில் உங்களது மூத்த மகன் மு.க. முத்துவை எம்.ஜி.ஆருக்குப் போட்டியாகத் திரையுலகில் களமிறக்கினீர்கள். கட்சிக்காரர்களைத் தூண்டிவிட்டு ரசிகர் மன்றங்களை உருவாக்கினீர்கள். இறுதியில் மு.க. முத்துவை நிலைநிறுத்தவும் முடியவில்லை. எம்.ஜி.ஆரை கழகத்தில் நீடிக்க வைக்கவும் முடியவில்லை. இதன் விளைவாக, 13 ஆண்டுகள் நீங்கள் பதவி இல்லாத இருளில் தடுமாற நேர்ந்தது. ஆனாலும் நீங்கள் பாடம் கற்கவில்லை. இப்போது இளம் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோருக்குப் போட்டியாக உங்கள் பேரன் அருள்நிதியை கலை உலகில் இறக்கியிருக்கிறீர்கள். விஜய்யின் படங்களுக்கு பல முட்டுக்கட்டைகளைப் போட்டுத் தடுக்க நடைபெற்ற முயற்சி வெற்றி பெறவில்லை. விஜய்யின் பகையைத் தேடிக் கொண்டதுதான் மிச்சம். திரையுலகைக் கபளீகரம் செய்ய உங்கள் வாரிசுகள் செய்த முயற்சியின் விளைவாக, ஒட்டுமொத்தத் திரையுலகமும் உங்களுக்கு எதிராகத் திரும்பிவிட்டதே! கடைசிவரை அண்ணா காங்கிரஸ் எதிர்ப்பாளராகவே திகழ்ந்தார். மதுவிலக்குக் கொள்கையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால், அண்ணா மறைந்த உடனேயே நீங்கள் மதுக்கடைகளைத் திறந்து இளைய தலைமுறையின் சீரழிவுக்குக் காரணமானீர்கள். அதைப்போல 1971-ம் ஆண்டில் காங்கிரஸýடன் கைகோக்கத் தொடங்கி இன்றுவரை அந்த உறவை நீட்டிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறீர்கள். நேரு குடும்பத்துக்கும் தனக்கும் உள்ள உறவை யாரும் பிரித்துவிட முடியாது எனத் தம்பட்டம் அடிக்கிறீர்கள். 1959-ம் ஆண்டு சென்னைக்குப் பிரதமர் நேரு வந்தபோது கறுப்புக் கொடி என்ற பெயரில் அவர் மீது உங்களது தம்பிகள் செருப்புகளை வீசினார்கள். 1978-ல் மதுரைக்கு இந்திரா காந்தி வந்தபோது கொலை முயற்சி நடைபெற்றது. அது மட்டுமல்ல, பாட்னாவில் வி.பி. சிங் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் எதிர்ப்புக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசும்போது, நான் வெளிநாட்டுப் பெண்ணை மணந்தவன் இல்லை என ராஜீவைச் சாடினீர்கள். நேரு குடும்பத்தின்மீது நீங்கள் வைத்திருக்கிற அளவற்ற அன்பின் அறிகுறிகள் இவை. பல கட்டங்களில் காங்கிரஸ் தலைமையை மிரட்டிப் பணியவைக்க நீங்கள் முயற்சி செய்தீர்கள். மத்திய அமைச்சரவையில் மகனுக்கும், மகளுக்கும் இடம்கேட்டு நீங்கள் நடத்திய மிரட்டல் நாடகமும், சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸýக்கு எதிராக விடுத்த மிரட்டலும் கடைசியில் உங்களின் சரணாகதியில்தான் முடிந்தது. 1971-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் நாடாளுமன்றத்துக்கு ஒன்பது இடங்களுக்கு மேல் தர முடியாது. சட்டமன்றத்தில் ஓரிடம்கூட கிடையாது என இந்திராவையே மிரட்டிப் பணியவைத்த நீங்கள், இன்று சோனியாவிடம் ஒவ்வொரு முறையும் சரணடைவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருக்கிறது. அதிகாரம், பணம் ஆகியவற்றின் பலத்தோடு உங்கள் மகன் அழகிரி திருமங்கலம் இடைத்தேர்தலில் கையாண்ட தில்லுமுல்லுகள் உங்கள் ஆசியோடுதானே நடைபெற்றன. அதைத்தொடர்ந்து நடைபெற்ற அத்தனை இடைத்தேர்தல்களிலும் திருமங்கலம் சூத்திரத்தின் அடிப்படையில்தானே நீங்கள் வெற்றிபெற முடிந்தது. இதைக் கண்டு மகிழ்ந்து மகனை உச்சிமுகர்ந்து பாராட்டினீர்கள். ஆனால், தேர்தல் ஆணையம் விழிப்படைவதற்கு இவை காரணமாயிற்று என்பதை அப்போது நீங்கள் உணரவில்லை. சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் மிகுந்த கவனத்துடன் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாகத்தானே உங்களால் முறைகேடுகளை அரங்கேற்ற முடியவில்லை. தேர்தல் முடிந்த பிறகு தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி விடுத்த அறிவிப்பு நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக நாடு முழுவதும் ரூ. 70 கோடி கைப்பற்றப்பட்டது. இதில் ரூ. 60 கோடி தமிழ்நாட்டில் மட்டும் கைப்பற்றப்பட்டது. நாங்கள் ஒரு கோடி ரூபாயைக் கைப்பற்றியிருக்கிறோம் என்றால் 40 முதல் 50 கோடி ரூபாயை விநியோகிக்கவிடாமல் தடுத்து இருக்கிறோம் என்று பொருள் எனக் கூறியுள்ளார். அவர் கூற்றுப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் ரூ. 2,400 கோடி முதல் ரூ. 3,000 கோடி வரை பணம் விநியோகிக்கவிடாமல் தடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது. ஜனநாயகத்தைச் சீரழிக்கத் தமிழ்நாட்டில் உங்கள் கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி குறித்து நீங்கள் இதுவரை வெட்கமடையவில்லையே, அது ஏன்? நீங்கள் உள்பட கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் தொகுதி மாறி போட்டியிட்டும் பயனில்லாமல் போனது ஏன்? தி.மு.க. வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது ஏன்? மூத்த அமைச்சர்களும் கூட்டணித் தலைவர்களும் படுதோல்வி அடைந்தது ஏன்? நீங்கள் சிந்தித்தது உண்டா? இனிமேலாவது சிந்திப்பீர்களா? இலவசங்களை அள்ளித் தந்தும், பல ஆயிரம் கோடி ரூபாய்களை வாரியிறைத்தும் பலமான கூட்டணி அமைத்தும் களம் இறங்கியபிறகு தோல்வியைத் தழுவியது ஏன்? இலங்கையில் நடைபெற்ற போரில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டபோது, அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த முயற்சியும் செய்யாமல் உண்ணாவிரத நாடகத்தை நடத்தி காங்கிரஸýக்குத் துணை போனது இந்தத் தோல்விக்குரிய முக்கிய காரணமென்பதை இப்போதாவது உணர்கிறீர்களா? முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக்கட்டத்தில் மக்களைக் காப்பதற்காக தனது மகனையே களமுனைக்கு அனுப்பிக் காவுகொடுக்க ஒரு தலைவன் முன்வந்தான். அதே காலகட்டத்தில் தில்லியில் தனது மகனுக்கும், மகளுக்கும் பதவி பெறுவதற்காக மடிப்பிச்சை ஏந்தி நின்றார் ஒரு தலைவர் என்ற தீராத பழிக்கு ஆளாகிவிட்டீர்களே! உங்களின் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள், இயற்கை வளங்கள் கொள்ளை, மோதல் சாவுகள், உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல், அன்னிய நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரத்தை வழங்கிவிட்டு மக்களுக்கு மின்சாரத் தடை ஏற்படுத்திய கொடுமை போன்றவற்றை விரிக்கின் பெருகும். உங்கள் தோல்விக்கு இவையெல்லாம் துணை நின்றன. திரைப்படங்களுக்கு வசனம் எழுதுவதில் வல்லவர் நீங்கள் என்பதை நான் மறுக்கவில்லை. நீங்கள் எழுதிய வசனங்களிலேயே என் மனதில் இன்னமும் நிற்பது "மனசாட்சி உறங்கும்போதுதான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்பி விடுகிறது' என பூம்புகார் படத்தில் நீங்கள் எழுதிய வசனம் உங்களுக்கு இன்று எல்லா வகையிலும் பொருத்தமாகிறது. ஈழத் தமிழர்களை மட்டும் நீங்கள் கைவிடவில்லை. தமிழக மீனவர்களையும் கைவிட்டீர்கள். ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்ந்து படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க எதுவும் நீங்கள் செய்யவில்லை. உங்கள் மகள் கனிமொழி, ஆ. ராசாவுடன் கூட்டுச்சேர்ந்து நடத்திய ஸ்பெக்ட்ரம் ஊழலை மூடிமறைக்க நீங்கள் செய்த முயற்சி எதிர்விளைவை அல்லவா ஏற்படுத்தி விட்டது. ஈழத் தமிழர் பிரச்னையில் துரோகம் செய்த மத்திய அரசுக்கு ஆதரவாக நீங்கள் நடந்து கொண்டதற்குக் கிடைத்த கைமாறுதானே ஸ்பெக்ட்ரம். குடும்ப நலனைக் காப்பாற்ற காங்கிரஸ் தலைமையுடன் பணிந்து போனீர்கள். ஆனால், தமிழக மக்கள் உங்களையும் காங்கிரûஸயும் கூட்டணி சேர்ந்த கட்சிகளையும் கூட்டாகத் தண்டித்து விட்டார்கள். மதம், ஜாதி, பிராந்திய வேறுபாடுகள் இல்லாமலும் ஒட்டுமொத்த தமிழகமும் உங்களுக்கு எதிராகத் திரண்டது ஏன்? பல காலம் உங்களின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்ந்த சென்னை தவிடு பொடியானது ஏன்? அண்ணா வளர்த்த கட்சி, கடைசிக் கட்டத்தில் வடிவேலுவையும், குஷ்புவையும் நம்பி நிற்க வேண்டிய அவலத்துக்கு யார் பொறுப்பு? கடந்த ஐந்தாண்டு காலத்தில் எந்த மாநில முதலமைச்சரும் சந்தித்திராத பாராட்டு விழாக்களை நடத்தி, இதுவரை யாரும் பெற்றிராத விருதுகளையும் உங்கள் துதிபாடிகள் உங்களுக்கு அளித்தபோது கூச்சமின்றி அவற்றை ரசித்து ஏற்றீர்களே, இன்றைக்கு அந்தத் துதிபாடிகள் உங்களைத் தனிமையில் விட்டுவிட்டு, "அற்ற குளத்து அறுநீர் பறவைகளாக'ப் பறந்துவிட்டார்களே. அகில இந்திய காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்து உயர்ந்த நிலையில் இருந்த காமராஜ் 1967-ம் ஆண்டு தேர்தலில் தோற்றபோது மக்கள் தீர்ப்பை மதித்து ஏற்கிறேன் என்று கூறினார். அவருக்கு இருந்த ஜனநாயகப் பண்பு உங்களிடம் காணப்படாதது ஏன்? "மக்கள் ஓய்வளித்து விட்டார்கள்' என்று நீங்கள் கூறியதன் மூலம் ஜனநாயகத்தையும் பொது வாழ்க்கையையும் மாசுபடுத்தி விட்டீர்கள். பொது வாழ்க்கைக்கு வருகிறவர்கள் கடைசிவரை மக்களுக்குத் தொண்டாற்றுவதையே கடமையாகக் கொண்டு செயல்படுவார்கள். பதவியில் இருந்தால் மக்கள் தொண்டு, பதவியில் இல்லாவிட்டால் ஓய்வு என்று சொல்பவர் உண்மையான மக்கள் தொண்டராக இருக்க முடியாது. தமிழ்நாட்டில் காங்கிரஸ் தோல்விக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகும் பக்குவம் தங்கபாலுவுக்குக்கூட இருக்கிறது. ஆனால், பொது வாழ்க்கைக்குப் பொன் விழா கொண்டாடிய உங்களுக்கு இன்னமும் அந்தப் பக்குவம் வராதது ஏன்? இந்தக் கட்டத்திலேயாவது பிறரிடம் இல்லையென்றாலும் உங்கள் வாரிசிடமாவது எல்லாவற்றையும் ஒப்படைக்கலாம் என நீங்கள் எண்ணியதுண்டா? ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரவர்கள் செயல்பாடே அடிப்படை என்பதை வள்ளுவர் கூறுகிறார். குறளோவியம் தீட்டிய தாங்கள், இதை உணராதது ஏன்? ""பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல்''

Saturday, April 2, 2011


கம்யூனிசம் என்றால் என்ன?
நாட்டில் இருக்கும் பல ஓட்டுக்கட்சிகளை போல அதுவும் ஒரு ஓட்டுக்கட்சி. உலகில் இருக்கும் பல கொள்கைகளை போல அதுவும் ஒரு கொள்கை. பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு உலகியல் பார்வை. முதலாளித்துவத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கை. இப்படி பலவாறான மதிப்பீடுகள் கம்யூனிசத்தைப் பற்றி மக்களிடம் இருக்கிறது. ஆனால் கம்யூனிசம் என்பது ஒரு இயல்பு. மனிதர்களின் இயல்பான ஒரு உணர்வு. சாலையில் நடந்து செல்லும் ஒருவர் அங்கு ஒருவன் மற்றொருவனை அடித்து உதைத்துக்கொண்டிருப்பதை கண்டால், பாதிக்கப்பட்டவனின் சார்பில் பாதிப்பவனை தடுத்து நிறுத்த முன்வருவாரே அதன் பெயர் தான் கம்யூனிசம். அந்த உணர்வு தான் கம்யூனிசத்தின் சாரம். அந்த உணர்வை பரந்துபட்ட தன்மைகளுடன், பின்னணி, விளைவுகள் குறித்த பார்வையோடு  உலகளாவிய நிகழ்வுகளுடன் பொருத்தி அதற்கான தீர்வுகளை சிந்தித்தால் அதன் பெயர்தான் கம்யூனிசம்.

இருக்கும் பலவிதமான அரசியல் கட்சிகளைப் போல ஆட்சிக்கு வருவதை மட்டுமல்ல யாருக்கான அரசாக இயங்குவது என்பதையே முதன்மைப் படுத்துவதால் இருக்கும் கட்சிகளிடையே கம்யூனிசம் மாறுபாடுடையது. மக்களின் துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் காரணம் தேடி மருளவைக்கும் சொற்களால் மலட்டுப்பரப்புரை செய்யும் கொள்கைகளிடையே “உலகை வியாக்கியானம் செய்வதல்ல அதை மாற்றியமைப்பதே நோக்கம்“ என்று அறிவித்துச் செயல்படுவதால் கம்யூனிசம் தனித்தன்மையுடையது. மனித இனத்தின் பண்டைய வரலாறு முதல் இன்றைய கலாச்சார வீக்கங்கள் ஈறாக அனைத்தையும் அறிவியல் மேடையில் உரசிப்பார்த்து இனங்காண்பதால் பொருளியல் கொள்கை எனும் தூற்றல்களில் நனையாமல் நிற்பது. மனிதர்களின் முடை நாற்றமெடுக்கும் சிந்தனை ஊறல்களை, அது பல்லூழிகளாக தொடர்ந்திருந்தாலும், சுகந்த மணம் தருவதாக நினைத்துக்கொண்டிருந்தாலும், அவைகளை அகற்றி இறுக்கம் தளர்த்தும் வழிமுறைகளுடன் இருப்பதால்; விமர்சனம் சுயவிமர்சனம் எனும் தளத்தில் நிற்பதால் முதலாளித்துவத்திற்கு மட்டும் எதிரானதாக இதை குறுக்கிவிட முடியாது.
கம்யூனிசம் ஒரு மதமல்ல, இங்கு முன்னாசிகளோ முக்கிய தெய்வங்களோ இல்லை. மார்க்சும், ஏங்கெல்சும் படைத்தவற்றை லெனினும், மாவோவும் மேம்படுத்தினர். எனவே இங்கு வேதமும் இல்லை. உழைப்பே இங்கு விதி, போராட்டமே மகிழ்ச்சி.
எல்லாம் சரி, கம்யூனிசம் ஏன் நீடித்த வெற்றியை பெறமுடியவில்லை?
ரஷ்யா, சீனா என்று சோசலிச நாடுகள் இன்று முதலாளித்துவத்தின் பிடியில், சோசலிச தலைவர்களே முதலாளித்துவத்தை மீள்இறக்குமதி செய்தவர்கள். எப்படி நிகழ்ந்தது இது? கம்யூனிச கொள்கைகளின் கட்டுறுதியான தாக்கமும், மக்களிலிருந்து உருவாகிவந்த தலைவர்களின் ஈடுபாடும் அத்தனை நெகிழ்வானதா? புரட்சியை நடத்திய மக்கள் இவர்களின் பிறழ்தலுக்கு எப்படி மெளன அங்கீகாரம் வழங்கினார்கள்? என்றெல்லாம் அலையலையாய் எழுந்துவரும் கேள்விகள். இவைகள் எல்லாவற்றையும் விட பதிலளிக்கத்தகுந்த கேள்வி ஒன்று உண்டு. மக்களின் மன இயல்புகளை புரிந்து கொள்ளாமல், இயற்கைக்கு அப்பாற்பட்டு வரட்டுக் கற்பனையான சூத்திரமாக கம்யூனிசம் இருப்பதனால் தான் கம்யூனிசத்தை நோக்கி நகராமல் சோசலிசம் பின்னடைந்து விடுகிறதா? என்பது தான் அந்தக் கேள்வி.
இந்தக் கேள்வியின் அடிப்படை எங்கிருக்கிறது? சோசலிச சமுதாயத்தில் அல்லது சோசலிச அரசின் கீழ் இருக்கும் மக்கள் கட்டாயமாக தங்கள் உழைப்பை அரசுக்கு செலுத்தவேண்டும் பகரமாக அரசு தரும் ஊதியத்தை பெற்றுக்கொள்ளவேண்டும், அது போதுமானதாக இல்லாமற் போனாலும் கூட. தனியார்மயம் ஒழிக்கப்பட்டு எல்லாமே அரசுடமையாக இருக்குமாதலால், தனிப்பட்ட தகுதிக்கு உரிய அங்கீகாரம் இல்லாமல் சமஊதியம் என்ற நிலை இருக்கும் என்பதால் முனைப்பு குறைந்து, ஆர்வம் கலைந்து உற்பத்தி குன்றும். நிர்வாகத்தினர், மூளை உழைப்பாளிகளுக்கு தனிப்பட்ட மரியாதை இல்லாமல் தொழிலாளர்களுடன் சமமாக்கப்படுவதால் அவர்களுக்கு மனரீதியான திருப்தியின்மை ஏற்படுவதால் நிர்வாக சீர்கேடு பெருகும், இதனால் ஊழல் அதிகரிக்கும். ஒருபக்கம் உற்பத்தி குறைவு, மறுபக்கம் நிர்வாக சீர்கேடு இரண்டும் சேர்ந்து சோசலிச அரசை பலவீனமாக ஆக்கிவிடுகிறது. இதனால் தான் சோசலிச அரசுகள் நீடிக்க முடிவதில்லை. இதுதான் அந்த கேள்வியை எழுப்புபவர்கள் சொல்லும் விளக்கம். ஒரு நாட்டில் சோசலிச அரசு எழுவதை ஏகாதிபத்திய அரசுகள் சகஅரசாக வாழ்த்தி வரவேற்கின்றன, ஆனால் கம்யூனிசத்தின் உள்ளீடற்ற தன்மையால் தான் அவைகள் வீழ்கின்றன, இது அந்தக் கேள்வியை எழுப்புபவர்கள் சொல்லவரும் நோக்கம்.
ஒரு நாட்டில் புரட்சியை சமைப்பதல்ல, புரட்சிக்கு பிறகு அதை வளர்த்தெடுத்துச்செல்வது தான் புரட்சியை விட பல மடங்கு கடினமான காரியம். இதற்கு கம்யூனிசம் தோற்றுவிட்டதாக உலகம் முழுவதும் பரப்பப்பட்டிருக்கும் இந்தவகை அவதூறுகளே சான்று. ஒரு நாட்டில் புரட்சி ஏற்பட்டாலோ அல்லது ஏற்படும் என அஞ்சினாலோ அந்நாட்டின் மீது எல்லாவித அரசியல் ராணுவ நெருக்கடிகளை ஏற்படுத்துவது ஒருபக்கம், கொலை கொள்ளை அடக்குமுறை; பஞ்சம் பட்டினி என்று அவதூறுகளை பொழிந்து கருத்து நெருக்கடிகளை ஏற்படுத்துவது மறுபக்கம். இந்த உலகில் அதிகாரத்தில் இருக்கும் முதலாளித்துவம் வெகுசில நாடுகளில் ஏற்படும் புரட்சிகர நடவடிக்கைகளுக்கு எதிராக எடுத்துவரும் இத்தகைய நடவடிக்கைகளே கம்யூனிசத்தின் உள்ளீடு குறித்து ஏகாதிபத்தியங்கள் எந்த அளவுக்கு பீதியடைந்திருக்கின்றன என்பதற்கான சான்று.
கம்யூனிசம், சோசலிசம் இரண்டையும் கலந்துகட்டி குழப்பிக்கொண்டு சொல்லப்படுபவது தான் மேற்கண்டது. எந்த ஒரு தனி நாட்டிலும் கம்யூனிசம் ஏற்பட முடியாது. முதலாளித்துவ ஆட்சியை புரட்சிகர நடவடிக்கையின் மூலம் கைப்பற்றி சோசலிச ஆட்சி ஏற்பட்டதும், தனியார் என்று யாருமே இருக்கமாட்டார்கள் என்பது கற்பனைதான். பன்னாட்டு முதலாளிகளின், தரகு முதலாளிகளின் சொத்துகள் பறிக்கப்பட்டாலும் தேசிய முதலாளிகள், குறு முதலாளிகள் நிபந்தனைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படுவார்கள். அவர்களின் கீழ் தொழிலாளர்கள் வேலைசெய்வார்கள். வித்தியாசம் என்ன? முன்புபோல் வரைமுறையற்று அவர்களால் சுரண்ட முடியாது. சட்டப்பாதுகாப்புடன் தொழிலாளர்கள் இருப்பார்கள். முன்பு சட்டப்பாதுகாப்புடன் முதலாளிகள் தொழிலாளிகளை சுரண்டிய கொடுமை முற்றுப்பெற்று அந்த சட்டப்பாதுகாப்பு தொழிலாளிகளுக்கு இருக்கும் என்பதை சகித்துக்கொள்ள முடியாதவர்கள் தான், தொழிலாலர்களின் ஆர்வம்  குறைந்துவிடும் உற்பத்தி குறையும் உற்பத்தித்திறன் குலைந்து விடும் என்றெல்லாம் கதையளக்கிறார்கள்.
உண்மையில் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் குறையும் என்பதைவிட முதலாளிகளின் லாபம் குறையும் என்பதுதான் உண்மை. அதுவரை முதலாளித்துவ நிர்வாக முறையின் கீழிருந்த தொழிலாளர்கள் ஒரு சொடுக்கில் மாறிவிடமுடியாது. இது மேலிருந்து திணிக்கப்படுவதுமில்லை. கீழிருந்து படிப்படியாக ஏற்படும் மாற்றம். இதுவரை தங்களின் லாபத்தை மட்டுமே கருதி ஆட்குறைப்பு செய்துவந்த நிறுவனங்கள் சோசலிசத்தின் கீழ் அதனதன் உற்பத்தி அளவீடுகளின் படி தொழிலாளர்களை சேர்த்துக்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுவார்கள். இந்தவகையில் வேலையில்லாத் திண்டாட்டம் குறையும். தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் உற்பத்தி பெருகும் என்பது தான் உண்மை. இவ்வாறான நிபந்தனைகளை ஏற்கமறுக்கும் நிறுவனங்கள் அரசால் ஏற்கப்படும். புதிதாக வேலை கிடைத்தவர்கள் உற்சாகத்துடன் வேலை செய்வர் என்பதுடன் முன்பு தனிப்பட்ட முதலாளியின் லாபத்திற்காக உழைத்தவர்கள் தற்போது நாட்டுக்காக தமக்கான முன்னேற்றத்திற்காக உழைப்பர். இந்தப் புரிதலையும், விழிப்புணர்வையும் அரசு செய்யும். அத்தோடு முதலாளிகளின் கொடுமையை நேரடியாக அனுபவித்து எதிர்த்துப் போராடியவர்கள் வெற்றிபெற்ற உற்சாகத்துடன் உழைப்பர் என்பதும் உண்மை. ஜார் ரஷ்யாவில் 2.1 கோடி ரஷ்ய பவுண்டாக இருந்த விவசாய உற்பத்தி 1930களில் 11 கோடி ரஷ்ய பவுண்டாக அதிகரித்தது. தொழில் துறையில் 1928ம் ஆண்டு உற்பத்தியை 100 விழுக்காடு என்று கொண்டால் 1927ம் ஆண்டு 82.4 விழுக்காடும் 1929ம் ஆண்டு 123.5 விழுக்காடும் 1930 ம் ஆண்டு 171.4 விழுக்காடும் உயர்ந்துள்ளது. (இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம் – இரயாகரன்) எனவே புரட்சிக்குப் பின் உற்பத்தி கூடியுள்ளதேயன்றி குறையவில்லை.
கூட்டுப்பண்ணைகளிலும், தொழிற்சாலைகளிலும் வேலை செய்பவர்களுக்கு ஒரேமாதிரியான சம்பளம் இருப்பதுதானே நீதியானது. இப்போது ஒரே மாதிரியான வேலையை செய்பவருக்கு ஆணுக்கு ஒரு ஊதியமும் பெண்ணுக்கு அதைவிட குறைவான ஊதியமும் வழங்கப்படுவதை முணுமுணுக்காமல் ஏற்றுக்கொள்பவர்கள், சமவேலைக்கு சமஊதியம் என்பதை குறையாக சொல்கிறார்கள் என்பதைக்கொண்டு அவர்களின் நோக்கத்தை அளவிட்டுக் கொள்ளலாம். உண்மையில் கருங்காலித் தொழிலாலர்களை சலுகைகள் கொடுத்து தங்களுக்கு கைக்கூலியாக செயல்படவைக்க முடியாது என்பதுதான் இப்படி முலாம்பூசி வெளிப்படுகிறது.

தனியார் நிறுவனங்கள் படிப்படியாக பொதுத்துறை நிறுவனங்களாக மாற்றமடைவதை, முதலாளித்துவ நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களுடன் ஒப்பிட்டு வேலை செய்யமாட்டார்கள், ஊழல் பெருகும் என்றெல்லாம் கவலையுறுபவர்கள், பொதுத்துறை நிறுவனங்களின் சீரழிவும், ஊழலும் தனியார்மயத்தின், தனியுடமையின் விளைவுகள் என்பதை மறந்து விடுகிறார்கள். தனியார்மயத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே பொதுத்துறை நிறுவனங்கள் சீரழிக்கப்படுகின்றன. நல்ல லாபமீட்டும் நிறுவனங்கள் கூட பலநூறு கோடி சொத்துக்களுடன் சில கோடிகளுக்கு விற்கப்படுவது மக்களை காப்பதற்காகவா இல்லை அந்த மக்களை சுரண்டுவதற்காகவா? பொதுத்துறை நிறுவனங்களில் லஞ்ச ஊழல் பெருத்துவிட்டது, தனியாரிடம் இருந்தால் தான் சிறப்பான நிர்வாகம் கிடைக்கும் என்று தனியார்மயத்திற்கு குடைபிடிப்பவர்கள் தனியார் நிறுவனங்களின் ஊழலையும், முறைகேடுகளையும் காட்டி ஒருபோதும் அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என்று கோரமாட்டார்கள். காரணம் அவர்களின் கோரிக்கைகள் வர்க்க நலனிலிருந்து வெளிப்படுபவையே அன்றி நிர்வாகச்சிறப்பிலிருந்தல்ல.
என்னுடையது எனும் எண்ணம் இருந்தால்தான் ஒரு பொருளை பாதுகாக்கும் எண்ணம் வரும். அதுவே பொதுச்சொத்தாக இருந்தால் அலட்சியமும், அழிப்பதும் பெருகத்தான் செய்யும் இது இயல்பு என்பவர்களும் இருக்கிறார்கள். ஆம் இது இயல்புதான். யாருக்கான இயல்பு? தன்னுடைய உரிமையில்லாத எதையும் தான் அடையத்துடிக்கும், அதையே தனிமனித உரிமையாக, முன்னேற்றமாக கூறித்திரியும் முதலாளித்துவ வக்கிரம் பிடித்தவர்களின் இயல்பு. ஒரு (கிராமத்து) மனிதன் தனக்கு எந்தவித லாபமும் இல்லையென்றாலும் சின்னஞ்சிறு செடி அழியும் நிலை ஏற்பட்டால் அதை காக்க முனைவான். ஆனால் வேறொரு (நகரத்து) மனிதனோ வளர்ந்த பெரிய மரமானாலும் தனக்கு லாபம் கிடைத்தால் வெட்டி விற்கத்தயங்க மாட்டான். இந்த இருவரின் செயல்பாடுகளின் பேதம் எதை அடிப்படையாகக் கொண்டது? பொதுச்சொத்தை தனதாக்கிக் கொள்ளும் வெறியையல்லவா அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. பொதுச்சொத்துகள் யாரால் அழிகின்றன? ஆக்சிஜன் தொழிற்சாலைகளாக இருந்த உலகின் காடுகளை அழித்தது யார்? வற்றாத ஆறுகளை வரளச்செய்தது யார்? நிலத்தடி நீரை தனது சொந்த லாபத்திற்காக உறிஞ்சிக்குடித்து மக்களை குடிநீருக்காக அலைய வைத்திருப்பது யார்? காற்றை மாசுபடுத்தியது யார்? மக்கள் வாழ்வை நாசப்படுத்தியது யார்? உலகில் பொதுச்சொத்து என்று எதுவுமே இருக்கக் கூடாது எல்லாம் தனதாக இருக்கவேண்டும் என்பதினால் தான் இத்தகைய கோரங்கள். ஆக மக்கள் இயல்பு என்று இவர்கள் கூறுவது தங்களுடைய இயல்பைத்தான். யார் இதுவரை பொதுச்சொத்தை வரைமுறையின்றி அழித்து நாசம் செய்தார்களோ அவர்கள் தான் இப்போது தனியார்மயப் படுத்துவதன் மூலம்தான் பொதுச்சொத்தை காக்கமுடியும் என்பவர்கள். இவர்களின் நோக்கம் காப்பதல்ல, தன்னுடையதாக்கிக் கொள்வது.
தன்னுடைய உழைப்பின் பலன் முழுமையாக தனக்கு கிடைக்கும் என்றால்தான் ஒரு மனிதன் தன்னுடைய ஈடுபாட்டுடன் கூடிய முழுமையான உழைப்பை அதில் செலுத்துவான் என்பது இவர்களுடைய வேதவசனங்களில் ஒன்று. இதைச்சொல்லுவது யார்? உழைக்கும் தொழிலாளிகளின் உழைப்பை யார் ஓட்டச்சுரண்டி தன்னை வளப்படுத்திக் கொள்கிறார்களோ, அவர்கள் தான். இன்றைய தொழிலாளர்கள் காலம் மறந்து தினமும் உண்ணும் உறங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் உழைத்துக் களைப்பது தன் உழைப்பின் பலன் முழுமையாக தனக்கு கிடைக்கிறது எனும் திருப்தியினால் அல்ல. எவ்வளவு உழைத்தாலும் தாங்கள் சுரண்டப் படுவதை அறியாமல் அவர்களை பசியே ஆண்டுகொண்டிருக்கிறது என்பதால். முதலாளித்துவம் மக்களை தின்று கொண்டிருக்கிறது. ஆனாலும் மக்கள் உழைப்பை மறக்கவில்லை. ஆனால் கம்யூனிசம் வந்தால் உழைப்பை மறந்து விடுவார்கள், ஆர்வம் குன்றிவிடும் என்கிறார்கள். இதைத்தான் சாத்தான் வேதம் ஓதுதல் என்பார்களோ.
மக்கள் கம்யூனிசத்தை புரிந்து அதை ஏற்றுக்கொண்டு கம்யூனிஸ்டுகளாக மாறுவதும் அதன்பின்னர் புரட்சியும் சாத்தியமில்லாத ஒன்று என்பது சத்தியமில்லாத கூற்று. புரட்சிக்கு அனைவரும் கம்யூனிஸ்டுகளாக மாறவேண்டிய அவசியமில்லை என்பதுடன், முதலாளித்துவம் மக்களை கம்யூனிசத்தை நோக்கி விரட்டுகிறது என்பதுதான் சாத்தியப்பட்டுக் கொண்டிருக்கிறது.


                                                                      -சேபி-

Thursday, March 31, 2011


கருணாநிதி.........
தாய் தமிழ் காவலர்....தமிழன்னைக்கு விழா கண்ட  பெருமகனார்.....செந்தமிழின் மூத்த மகன்.... என்று கடைத்தமிழன்வரை அடையாளம் கண்டு கொள்ளப்பட்டவர் இவர்...ஆனால் கோவையில் இவர் செந்தமிழ் விழா நடத்திய விதம் இவரது தமிழ்ப்பற்றை உலகம் முழுதும் பறைசாற்றி உள்ளது (????).....  மொழிக்கான விழாவாக இது நடந்தாக தெரியவில்லை ஏதோ கட்சி மாநாடு என்றே அனைவரையும் நினைக்க வைத்தது ....இதில் அவரது முகத்திரை கிழிந்ததால் இனி மொழிப்பற்றை வைத்து தமிழனை ஏமாற்ற இயலாது என்பதை உணர்ந்ததாலோ என்னவோ இப்பொழுது இனப்பற்றை அதாவது ஆரிய - திராவிட வேறுபாட்டை கூறி தமிழனை மழுமட்டையாக்க பார்க்கிறார்...
இதனை நெல்லைக்கண்ணன் வாயிலாக இங்கு காண்போம்....
சமீபத்தில்... "தேர்தல் கமிஷன் ஆரியர்களை அரியணையில் ஏற்றி வைக்க முயலுகிறது" எனக்கூறியுள்ளார் கருணாநிதி...
M-Karunanidhi
அவரது வீட்டில் ஒரு தங்க நாதஸ்வரம், அவர் தந்தையாரிடம் இருந்தது என்று அவரே சொல்லிருக்கிறார். ஆனால் இன்றோ " நான் ஒரு சாமானியன் " என்று மீண்டும் திருச்சியில் பிதற்றியுள்ளார்......
            "ராஜா ஒரு தலித் என்பதால் தான் இத்தனை குதிக்கின்றனர்; டி.டி.கே.,ஆச்சாரியார் (இதே போல் பிரச்சனையில் சிக்கியவர்) அவரை விட்டுவிட்டனர்" என வேலூரில் கருணாநிதி புலம்பியுள்ளார்.அந்த ஆச்சாரியாரின் தாயார் ஸ்ரீரங்கத்தில் மரணமடைந்தார். கிரிஷ்ணமாச்சாரி வந்த தாயின் சடலத்தின் அருகில் ஒரு பத்து நிமிடம் இருந்துவிட்டு, தனது குடியிருப்புக்கு சென்றுவிட்டார்.உறவினர்கள் அவரிடம் போய்  ஈமச்சடங்கு செய்ய அழைத்தனர். பூணூல் போட்டுக்கொள்ளாத  டி.டி.கே., வேறு யாரையாவது வைத்துத் தாய்க்கு ஈமச்சடங்குகளை செய்ய சொன்னவர்,,
       அது சரி! தலித் ராஜாவை திகாருக்கு அனுப்பிவிட்டு தன் குடும்பத்தை மட்டும் காப்பாற்றியுள்ளார்  கருணாநிதி. ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக்கோ மரணமடைந்துவிட்டார்....
        ஆரியர் சோழவந்தான்  சுப்பரமணியசாமி சொன்னார்," ராஜாவின் உயிரை காப்பாற்றுங்கள்" என்று. நல்லவேளை சி.பி.ஐ காப்பாற்றி விட்டது.
         கருணாநிதிக்கு சில கேள்விகள்.. 1967 ல் கூட்டணித் தந்திரத்தைக் கற்றுத்தந்த ராஜாஜி, உங்கள் கூற்றுப்படி ஆரியர்தானே...கடந்த 1971 ல் அவசர அவசரமா ஓராண்டுக்கு முன்பே சட்டசபையை கலைத்துவிட்டு, இந்திரா தலைமையில் தேர்தலை சந்தித்தீரே. அந்த இந்திரா காஷ்மீரத்து பார்ப்பன பெண்தானே..
       கடந்த 1977 ல் தனியே நின்று, மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டு,கடந்த 1980 ல் லோக்சபா தேர்தலில் அரக்கி என்று இந்திராவை வர்ணித்த தாங்கள், "நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக! என்று அழைத்தீர்கள்.அப்போதும் அவர் உங்கள் மொழியில் ஆரியர்தானே..
      இன்று., கூட்டணியை உறுதி செய்து தந்திருக்கும் பிரணாப் முகர்ஜியும் ஆரியர்தானே....
       நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகன் ராதாரவி, இன்று ஒரு செய்தி தந்திருக்கிறார். நீங்கள் கடனில் தவித்த நேரம் MGR.,ஜெயலலிதா இருவரும் ,"எங்கள் தங்கம்" படத்தில் இலவசமாக நடித்துத் தந்து உங்கள் கடனையெல்லாம் அடைக்க உதவினர் என்கிறாரே. அந்த ஜெயலலிதா உங்கள் மொழியில் ஆரியர்தானே...  
புரியவில்லை..
               தேர்தல் கமிஷனை, பொதுவுடைமை இயக்கங்கள்தான் விமர்சிக்கும். அவர்கள் ஆதிக்கம் உள்ள கேரளா,மேற்கு வங்கம் மாநிலங்களில் கூட தேர்தல் நடக்கிறது. அவர்கள்தேர்தல் கமிஷனை ஒன்றும் சொல்லவில்லை. தி.மு.க.வின் மத்திய அமைச்சர் பாலு, காவல் துறை நண்பர்களைத் திட்டுகிறார். பயம் வந்துவிட்டது போல் தோன்றுகிறது.
              கேரளாவில் இரண்டு பக்கமும் கோடிக் கொள்ளைகள் இல்லை. மேற்குவங்கத்திலும் இதுதான் நிலைமை. இங்கோ, மதுரையில் மட்டும் பலகோடி பிடிபட்டிருகிறதே. தமிழகத்தில் கூட ஒரு கட்சியும் குறை கூறாதபோது, நீங்கள் மட்டும்  ஆரியர் என்று ஆரம்பித்துவிட்டீரே.. பேரன்கள் ஆரிய குலப் பெண்களைத் திருமணம் செய்யும் அதைத் தடுக்காத தாங்கள். இப்போது ஆரியர் எனக்கூறுவது சிரிப்பை வரவழைக்காதா????

                                                                                    -சேபி-